உள்ளூர் செய்திகள்

காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Published On 2023-03-10 09:56 GMT   |   Update On 2023-03-10 09:56 GMT
  • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News