தி.மு.க. தலைமை பொதுகுழு உறுப்பினராக மீண்டும் சென்னிமலை சா.மெய்யப்பன் தேர்வு
- தி.மு.க. வின் 15-வது உட்கட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அதிகார பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
- திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக சென்னிமலை டவுன் காட்டூர் ரோட்டை சேர்ந்த சா. மெய்யப்பன் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னிமலை:
தி.மு.க. வின் 15-வது உட்கட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அதிகார பூர்வமாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இதில் திருப்பூர் தெற்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் இருந்து மீண்டும் 2-வது முறையாக சென்னிமலை டவுன் காட்டூர் ரோட்டை சேர்ந்த சா. மெய்யப்பன் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் பள்ளிகளில் படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் தி.மு.க.வில் பணியாற்றி அதன் பின்பு தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் என படிப்படியாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். சா.மெய்யப்பன் மீண்டும் 2-வது முறையாக தலைமை பொதுக்குழு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார்.
இவர் தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வர். மேலும் சென்னிமலை, அம்மா டெக்ஸ் கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கத்திலும் தலைவராக தி.மு.க. ஆட்சியில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மீண்டும் தலைமை பொதுகுழு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள சா. மெய்யப்பனுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.