உள்ளூர் செய்திகள்

சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2022-11-19 14:42 IST   |   Update On 2022-11-19 14:42:00 IST
  • இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
  • நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோட்டில் பார்க்ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்கள் மூலம் ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், ஆயில், தானியங்கள் உள்ளிட்டவைகள் சரக்கு லாரிகள் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் பவானி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரை அந்நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்வேறு சுமை தூக்கும் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவா ர்த்தை நடத்த வந்த ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் செயலாளர் மீது சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலா ளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெளிமாநில சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு அனுப்பி வைப்பது முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சரக்குகள் அனுப்ப முடியாமல் தேங்கி வரு வதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும், நடவடிக்கை எடுக்கா விட்டால் அனைத்து சங்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News