அரசு மருத்துவ கல்லூரி ஒப்பந்த பணியாளர்கள் 4-வது நாளாக போராட்டம்
- தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.
இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.
மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.