புளியம்பட்டி வார சந்தை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
- குப்பை கழிவுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
- நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்ப ட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் குப்பைகள் நகராட்சி வாரச்சந்தை வளாக த்தில் கொட்டப்ப ட்டு வருகிறது. அந்த கு ப்பை கள் சில ஆண்டுக ளா க கொட்டி வரு வதால் தற்போ து குப்பைகள் மலை போல் காட்சியளி க்கிறது.
இது குறித்து சில தினங்க ளுக்கு முன்பு பாரதி ஜனதா கட்சி நகர் மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஜெய் காமராஜ் ஈ ரோடு மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளா ர்.
அந்த மனு வில் கூறி யிரு ப்பதாவது:
கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு சுகாதாரமான வாரச்சந்தை யாக இருந்த இந்த பகுதி குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் குப்பை களை தீ வை த்து எரிப்பத னால் சுவாசி க்கும் காற்று மாசு பட்டு ள்ளது.
அதே போல் பசுமையாக இருந்த மர ங்கள் அழிந்து விட்டது. பல ஆண்டுகளாக இருந்த மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மாசப்பட்டுள்ளது.
இத னால் சந்தை க்கு வரும் வியா பாரி கள், பொது மக்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வாரச்ச ந்தையில் குப்பைகள் கொட்டு வதை தடுத்து பொது மக்களையும், கால்நடைக ளையும் காப்பாற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அதன் பேரில் அந்த பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்தார். இதையடுத்து உடனடியாக தீர்வு ஏற்படும் வகையில் அங்கு இருக்கும் குப்பை கழிவுகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
இனிமேல் புளியம்பட்டி வார சந்தையில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படும். இந்த பகுதியில் உள்ள குப்பைகள் 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார்.
மாவட்ட கலெக்டரிடம் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு பா.ஜ.க. சார்பாக நன்றி தெரிவிக்கப்ப ட்டது.