உள்ளூர் செய்திகள்
வீடு தீப்பிடித்து எரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி உடல் கருகி பலி
- வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகேஉள்ஓடத்துறை நரிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (82). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி சரஸ்வதி (66).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மற்றவர்கள் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது ஓட்டு வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார். இதுப்பற்றி தெரியவந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.
அப்போது வீட்டில் உடல் கருகி இறந்த நிலையில் சங்கமேஸ்வரன் மீட்கப்பட்டார்.