உள்ளூர் செய்திகள்

சாக்கடையில் விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2022-09-29 15:37 IST   |   Update On 2022-09-29 15:37:00 IST
  • கடைக்கு சென்ற ராஜ் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார்.
  • உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோட்டுவீராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயுடன் வசித்து வந்தார்.

உடல் நலம் பாதித்ததால் ராஜ் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை கடக்க முயன்றபோது கால் தவறி சாக்கடைக்குள் விழுந்து விட்டார். அப்போது காயம் எதுவும் இல்லாததால் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை அவருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News