உள்ளூர் செய்திகள்

சீரமைக்கப்பட்ட சத்துணவு கூடம்.

அரசு பள்ளி சத்துணவு கூடத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

Published On 2023-04-25 15:15 IST   |   Update On 2023-04-25 15:15:00 IST
  • பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.
  • ரூ.15 ஆயிரம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக சத்துணவு கூடம் பழுதடைந்து காணப்பட்டது.

இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாஹிர் வேண்டுகோளை ஏற்று, நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை சார்பில் ரூ.15,000 மதிப்பீட்டில் சத்துணவு கூடம் பழுது நீக்கம் செய்து சீரமைக்கப்பட்டது. இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து முடித்தனர்.

Tags:    

Similar News