உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகள் குறித்து மனுவாக அளித்தனர். தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.
மேலும் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.