உள்ளூர் செய்திகள்

கோவையில் என்ஜினீயரை தாக்கிய தந்தை-மகன்

Published On 2022-06-19 15:21 IST   |   Update On 2022-06-19 15:21:00 IST
  • திருப்பதி, வசந்தகுமார் ஆகியோர் கணேஷ்குமாரிடம் நீ எப்படி எங்களை வேலையை விட்டு நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.
  • காயமடைந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

கோவை:

கோவை உப்பிலிபாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 42). என்ஜினீயர். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த திருப்பதி (50), அவரது மகன் வசந்தகுமார் (30) ஆகியோர் வேலை பார்த்தனர்.

அப்போது அவர்கள் செய்யாத வேலையை செய்ததாக கூறி கணேஷ்குமாரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. இதனை அறிந்த கணேஷ்குமார் தந்தை, மகன் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இதனால் இருவரும் என்ஜினீயர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று கணேஷ்குமார் உப்பிலிபாளையம் காந்திநகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பதி, வசந்தகுமார் ஆகியோர் கணேஷ்குமாரிடம் நீ எப்படி எங்களை வேலையை விட்டு நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கணேஷ்குமாரை இரும்பு கம்பியால் தாக்கினர்.

இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் திருப்பதி, அவரது மகன் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News