உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு மளிகை, இனிப்பு, காரம் மற்றும் புத்தாடைகளை எஸ்.பி. கலைச்செல்வன் வழங்கிய போது எடுத்த படம்.

தருமபுரியில் தீபாவளி பண்டிகைக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு இனிப்பு, புத்தாடைகள் -போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வழங்கினார்

Published On 2022-10-23 12:59 IST   |   Update On 2022-10-23 12:59:00 IST
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.
  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது

தருமபுரி,

தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் லிட்டில் லைட் தன்னார்வ அமைப்பின் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், புத்தாடை, இனிப்பு, காரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தருமபுரி ஆயுதப்படை காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கலந்து கொண்டு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளாக இருந்து வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களை பாராட்டி கேடயங்களும் வழங்கப்பட்டது.

இதனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News