உள்ளூர் செய்திகள்
படப்பை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
- வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
படப்பை:
குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பூந்தண்டலம் மணிமங்கலம் ஒரத்தூர் நாட்டரசன்பட்டு வடக்குப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம் பள்ளி வகுப்பறை, கட்டிடம் நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.