உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சித்ரா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி. அருகில் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரவிசந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

ஏற்காட்டில் இலவச சைக்கிள் வழங்கல்

Published On 2022-09-29 12:49 IST   |   Update On 2022-09-29 12:49:00 IST
  • ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
  • இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

ஏற்காடு:

ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.

இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.

மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். ‌ இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.

இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.

Tags:    

Similar News