உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்த படம்.

சிவகிரி சேனைத்தலைவர் பள்ளியில் 215 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-10-11 07:32 GMT   |   Update On 2022-10-11 07:32 GMT
  • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. 215 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
  • உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும்.

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 215 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும். மாணவர்கள் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்படுகிறது. இதனை மாணவ- மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வளரும் மாணவ- மாணவியர்கள் சுயநலம் இல்லாமல் பொது நலத்தோடு, தனிமனித ஒழுக்கத்தோடு நாட்டுக்காக உழைக்க வேண்டும். மன்னர் கலிபா போல் நீதியுடனும், நியாயத்துடனும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.இப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கையான அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும்தான் மாதந்தோறும் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை கிடைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை சட்டசபையில் பேசியும், தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறியும் வெற்றி பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேரூராட்சி மன்றத்தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், சிவகிரி நகர தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் மாரிச்சாமி, அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன்,

வார்டு உறுப்பினர்கள் சித்ராதேவி, செந்தில்வேல், அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரேவதி, மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். உதவி தலைமையாசிரியை சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News