உள்ளூர் செய்திகள்

கொல்லிமலையில் இருந்து சேலத்திற்கு அன்னாசி வரத்து அதிகரிப்பு

Published On 2022-07-19 15:10 IST   |   Update On 2022-07-19 15:10:00 IST
  • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது.
  • தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ அன்னாசி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம்:

தமிழகத்தில் ஓசூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் ெபங்களூரு, கேரளா போன்ற இடங்களில் அன்னாசி பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு

தற்போது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த மழையால் அன்னாசி பழம் நல்ல விளைச்சலை தந்துள்ளது.

இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அன்னாசி பழத்தை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி கொல்லிமலை–யில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது.

கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அன்னாசி பழங்கள், சேலம் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ ரூ.15

தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ அன்னாசி பழம் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News