உள்ளூர் செய்திகள்
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்.
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய கட்டிடப்பணி
- டாக்டர்கள்,செவிலியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள்.
- பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீடு மற்றும் டாக்டர்கள்,செவிலியர்கள் தங்குவதற்கான குடியிரு ப்புகள் கட்டுவதற்காக ரூ.1 கோடியே 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நகர்மன்றத்தலைவர் செல்லத்துரை,துணைத் தலைவர் மாயக்கண்ணன் முன்னாள் நகர் மன்றத்த லைவர் முகமது இப்ராஹிம், திண்டுக்கல் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன், கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரதி, நகராட்சி கவுன்சிலர் அப்பாஸ் உட்பட அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.