தமிழ்நாடு
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமானுக்கு சம்மன் - காவல் துறை நடவடிக்கை
- பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார்.
- சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் தமிழ் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், சீமான் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரியார் குறித்து அவதூறு பேசிய சீமானுக்கு காவல் துறை நோட்டீஸ் அளித்துள்ளது.
அதன்படி வருகிற வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று காவல் துறையினர் சம்மன் அளித்தனர்.