உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் திரியும் கால்நடைகள்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் மேயும் கால்நடைகள்

Published On 2022-06-19 13:08 IST   |   Update On 2022-06-19 13:08:00 IST
குமாரபாளையம் அரசு பள்ளியில் மேயும் கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதி கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து மேய விடுகின்றனர். கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

விளையாட்டு பயிற்சி, என்.சி.சி. பயிற்சி பெறும் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க கூடாது. கடும் வெப்பம் காரணமாக வகுப்பறை வெளியில் மரத்தடியில் கூட சில நேரம் வகுப்புகள் நடைபெறுகிறது.

இவ்வாறு நடத்தப்படும் வகுப்புகளுக்கும் இடையூறாக இருப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News