உள்ளூர் செய்திகள்

இலத்தூர் உயர்நிலை பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு, முன்னாள் யூனியன் தலைவர் கோரிக்கை

Published On 2023-05-04 13:46 IST   |   Update On 2023-05-04 13:46:00 IST
  • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
  • அதில் , பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார்.

செங்கோட்டை:

தென்காசி அருகே இலத்தூரில் அரசு உதவி பெறும் லட்சுமி அரிகர உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி மூடப்படு வதா கவும், மாணவ-மாணவிகள் சேர்க்கை நிறுத்தப்படு வதாகவும் பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகி ன்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு செங்கோட்டை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீவநல்லூர் சட்டநாதன் கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

லட்சுமி ஹரிஹர உயர்நிலைப் பள்ளியானது கடந்த 1956-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 7 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயர்நி லைப்பள்ளிகள் இல்லாத நிலையில் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர் பேரூராட்சிகள். நெடுவயல், கொடிக்குறிச்சி, சீவ நல்லூர், குத்துக்கல் வலசை, கணக்க ப்பிள்ளை வலசை ஊராட்சி களில் இருந்து மாணவ, மாணவிகள் இந்த பள்ளிக்கு வந்து தான் கல்வி படித்து சென்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியரிடம் வரும் கல்வி ஆண்டு முதல் இப்பள்ளி செயல்படாது. புதிய மாண வர்கள் சேர்க்கை கூடாது என கூறியதாகவும், மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பள்ளியின் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்ட தாகவும் தெரிகிறது. இது ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பள்ளியை அரசுடமையாக்கி, அரசு பள்ளியாக மாற்றி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த கோரிக்கை மனுவின் நகலை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர், மாநில பள்ளிக் கல்வி துறை செயலர், மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News