உள்ளூர் செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே அரசு பள்ளியில் மாணவனை கழிவறைக்கு தூக்கி சென்று ஓரினசேர்க்கையில் ஈடுபட முயற்சி

Published On 2022-09-02 15:10 IST   |   Update On 2022-09-02 15:10:00 IST
  • சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.
  • மர்ம ஆசாமிகள் 2 பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வரும் 12 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.

பின்னர் சிறுவனை குண்டுக்கட்டாக பள்ளியின் கழிவறைக்குள் தூக்கி சென்று அவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்றுள்ளனர்.

ஆனால் அந்த சிறுவன் அலறியபடி அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான். இதையடுத்து அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சிறுவன் கூறியுள்ளான்.

அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் தந்த தகவலின் பேரில் வழக்கு பதிந்து சிறுவனிடம் அத்துமீறிய மர்ம நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர்.

அரசு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News