உள்ளூர் செய்திகள்

விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட கடலூர் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கடலூரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் பாராட்டி இனிப்பு வழங்கினர்

Published On 2023-11-09 13:33 IST   |   Update On 2023-11-09 13:33:00 IST
  • இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

கடலூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போலீஸ்காரர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், பாலா ஆகியோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் செல்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

Tags:    

Similar News