தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணத்தையொட்டி முக்கிய கோவில்களில் நடை அடைப்பு -மாலை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்
- திருப்பள்ளியெழுச்சி பூஜைகளுக்குப் பின்னர் நடை சாத்தப்பட்டது.
- கோவில்களை தூய்மைப்படுத்திய பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
தருமபுரி,
சூரிய கிரகணத்தை யொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் திருப்பள்ளியெழுச்சி பூஜைகளுக்குப் பின்னர் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் மாலை நடை திறக்கப்பட்டு கோவிலை சுத்தம் செய்தபிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் உடனாகிய கல்யாண காமாட்சியம்மன் கோவில், வரலட்சுமி உடனாகிய வரவாசுதேவர் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், ஓம்சக்தி , சவுடாம்பிகை அம்மன் கோவில், விநாயகர்,வேல்முருகன் கோவில், எஸ்.வி.ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவில், அபய ஆஞ்சநேயர் கோவில், சிவசுப்ரமணியசாமி கோவில்,அன்னசாகரம் சிவசுப்ரமணியசாமி கோவில், ராஜாபேட்டை ஸ்ரீ வெங்கட்டரமன சாமி கோவில், மூக்கனூர் ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில், சோமசுந்தரேஸ்வரர் கோவில்,பாலக்கோடு பால்வண்ண விநாயகர் கோவில்,தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்டரமணசாமி கோவில் நடைகள் மதியம் 12.30 மணிக்கு சாத்தப்பட்டு மாலை 6.32-க்கு பிறகு கோவில்களை தூய்மைப்படுத்திய பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.