உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2023-09-08 12:53 IST   |   Update On 2023-09-08 12:53:00 IST
  • இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகிற 23-ந் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News