நாகையில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது
- மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்படும்.
வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இதற்கு முன் விண்ணப்பம் அளித்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.
எனவே, நாகை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.