தியாகதுருகம் பகுதியில் 3 வீடுகள் எரிந்து சேதம்
- கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
- தீயை அணைக்க முயன்றனர்
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பெரிய மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைவாணி (வயது 38). இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். தீ மளமளவென பரவியதால் அணைக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்த னர்.
இதேபோல் தியாகதுருகம் அருகே பீளமேடு காட்டுக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (45) மற்றும் திம்மலை கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (47) ஆகி யோரது கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்த னர். பெரியமாம்பட்டு, பீள மேடு காட்டுக்கொட்டாய், திம்மலை ஆகிய 3 தீ விபத்துகளும் மின்கசிவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றதால் அதிக சேதம் ஏற்படுவதற்குள் தீயை அணைத்தனர். தீ விபத்தால் 3 வீடுகளின் சேதம் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.