உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜ.க. நிர்வாகியை தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு

Published On 2022-09-02 15:06 IST   |   Update On 2022-09-02 15:06:00 IST
  • பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தின் அருகே இருந்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.
  • காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிவிரைவு படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன் தினம் முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாப்பி ரெட்டிப்பட்டி பா.ஜ.க. கட்சியின் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து நேற்று மாலை பா.ஜ.க. சார்பில் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் விநாயகர் சிலையை வாணியாறு அணையில் கொண்டு சென்று கரைக்க பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தின் அருகே இருந்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது 100 மீட்டர் தாண்டி ஊர்வலமாக செல்ல கூடாது என தெரிவித்து வேலூர் இப்ராஹிம் மற்றும் பா.ஜ.வினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அதிவிரைவு படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் என 100-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இருப்பினும் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலமாக 500 மீட்டர் வரை விநாயகர் சிலையை எடுத்து சென்று வாணியானு அணையில் சிலையை கரைத்தனர்.

Tags:    

Similar News