உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் ராமானுஜர் மடம் திறப்பு விழா
- ஸ்ரீ ராமானுஜர் மடம் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகரம் ஏ.கொல்லஅள்ளி ரோட்டில் குலசேகர ராமானுஜ அறக்கட்டளை சார்பில் குலசேகர ராமானுஜர் மடம் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சீனிவாச ஆச்சார்ய சாமி முன்னிலையில் ஸ்ரீ ராமானுஜர் மடம் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குலசேகர ராமானுஜர் அறக்கட்டளை மற்றும் பாகவத கோஷ்டிகள், ஆண்டாள் கோஷ்டிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.