உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

Published On 2023-11-27 09:57 GMT   |   Update On 2023-11-27 09:57 GMT
  • மூடுபனியுடன் கடும்குளிர் கொட்டுகிறது
  • பொதுமக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அங்கு தற்போது சாரல் மட்டுமே பெய்கிறது. மேலும் ஊட்டியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது.

எனவே ஊட்டியில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை கார ணமாக பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளி களின் கூட்டம் அதிகளவில் காணப்படு கிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்க ளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்ப ட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் மாறுபட்ட காலநிலையால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதுதவிர காதுகளில் குளிர் காற்று புகாதவகையில் தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயனபடுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News