உள்ளூர் செய்திகள்
பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி
- தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- டி.என்.டி.றி.ஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியின் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் டி.என்.டி.றி.ஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியின் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவர்கள் வாலிபால் விளையாட்டில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், 14 வயதிற்குட்பட்டவர் பிரிவில் மாணவர்கள் கைப்பந்து போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடமும், சிலம்ப போட்டியில் 14 வயதிற்குட்பட்ட 30 கிலோ எடை பிரிவில் மாவட்ட அளவில் 3-ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களையும், பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர்கள் வசந்த் ஜெபத்துரை, ராஜேஷ் ஜெயசீலன், அக்னஸ் ஆகியோரை பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.