உள்ளூர் செய்திகள்

ஈஷா தன்னார்வலர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஈஷா தன்னார்வலர்கள் மண்வளம் காக்க பிரசாரம்

Published On 2022-07-11 15:11 IST   |   Update On 2022-07-11 15:11:00 IST
  • கோவை வெள்ளியங்கிரி ஆதியோகி சிலையிலிருந்து கடந்த மாதம் மண்வளம் காக்கும் மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
  • தேசிங்குராஜபுரம் ரகுபதி ஆகியோர் பொதுமக்களிடம் பேசியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மண்வளம் காக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

மண்வளம் காப்பதன் அவசியத்தை உணர்த்த பல்வேறு நாட்டு தலைவர்கள், மக்களை சந்தித்து மண்வளம் காக்கும் ஆக்கப்பூர்வமான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தும் விதமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் 100 நாட்கள் 27-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் வழியாக 30000 கி.மீ மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கோவை வெள்ளியங்கிரி ஆதியோகி சிலையிலிருந்து கடந்த மாதம் 24-ந் தேதி ஈஷா தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மண்வளம் காக்கும் பிரச்சார மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

அக்குழுவின் ஒரு பகுதியினர் திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர் வழியாக திருத்துறைப்பூண்டி வந்தடைந்தது. திருத்துறை ப்பூண்டி பகுதியில் மண்வளம் காக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா. துரை ராயப்பன், ரோட்டரி சங்க தலைவ ர்பாலசுப்பிரமணியன், திருத்துறைப்பூண்டி ஈஷா தன்னார்வலர்களும், ரோ ட்டரி கிளப் உறுப்பினர்களும் மற்றும் ஈசா தன்னார்வலர் பாலகுமார், கலையரசன், இந்துமதி, சரபோஜிராஜா, மோகன சுந்தரம், புகை ப்பட சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் சசிசுந்தர், சென்சாய் கார்த்திக்,இயற்கை விவசாயி தேசிங்குராஜபுரம் ரகுபதி ஆகியோர் பொதுமக்களிடம் பேசியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மண்வளம் காக்கும் பிரசாரத்தில் ஈடுப ட்டனர்.

Tags:    

Similar News