உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியில் கூலி தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை.
- உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ரத்தினாம்பாள் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மாலை வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25,000, 2 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ரத்தினாம்பாள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.