உள்ளூர் செய்திகள் (District)

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம்: வாட்ஸ்-அப் குழு அட்மினாக இருந்த இளைஞர -விருத்தாசலம் நீதிமன்றத்தில் சரண்

Published On 2022-09-14 09:58 GMT   |   Update On 2022-09-14 09:58 GMT
  • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
  • கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.

கடலூர்:

விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்த பழமலை என்பவரின் மகன் தேவேந்திரன் (வயது 27). இவர் வேப்பூர் பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என வாட்ஸ் அப் குழுவில், குழுவின் அட்மினாக இருந்துள்ளார். அதன் மூலம் கலவரம் நடக்க இவர் காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.

தேவேந்திரனையும் போலீசார் தேடிவந்தனர். இதனை அறிந்த தேவேந்திரன் நேற்று மாலை விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்னலட்சுமி முன்னிலையில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்த தேவேந்திரனை 2 நாட்கள் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி அன்னலட்சுமி உத்தரவிட்டார். இதனை யடுத்து போலீசார் தேவே ந்திரனை விரு த்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News