உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

நாகர்கோவிலுக்கு இன்று சரக்கு ரெயிலில் வந்த 1300 டன் பச்சரிசி

Published On 2023-01-10 07:57 GMT   |   Update On 2023-01-10 07:57 GMT
  • சரக்கு ரெயிலில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
  • கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் சரக்கு ரெயில் மூலமாக ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இன்று காலையில் காசி நாடாவில் இருந்து 21 பெட்டிகளில் 1300 டன் பச்சரிசி வந்தது. சரக்கு ரெயில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News