மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மேயரை கண்டித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
- பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
- பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
நாகர்கோவில்:
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.