வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது
- பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் கன்னியாகுமரி பகுதியில் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சுசீந்திரத்தில் ஒரு வீட்டில் இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் மார்த்தாண்டம் அருகே உள்ள பம்மம் ஈடன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடத்தப்படு வதாக புகார் வந்தது. மார்த்தாண்டம் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, குழித்துறை பெரியவிளை பகுதியை சேர்ந்த சுனில் (வயது 45) என்பவர் வெளிமாநில அழகிகளை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
இதேபோல் ஆரல்வாய்மொழியில் திருமண நிகச்சிக்கு என வீட்டை வாடகைக்கு எடுத்து, அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி ஒருவரை கைது செய்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வர, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அங்கி ருந்த பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்.