உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே தொழிலாளி மீது தாக்குதல்
- மது குடித்து விட்டு வீட்டில் தினமும் மனைவியிடம் தகராறு
- சேத மதிப்பு 2 ஆயிரம் ரூபாய்
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆரிஸ் (வயது 63), தொழிலாளி. அதே பகுதியில் வசிப்பவர் வேதமணி மகன் சிசில். இவர் மது குடித்து விட்டு வீட்டில் தினமும் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
இதனால் அவரது மனைவி பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் ஆரிஸ் என நினைத்த சிசில் சம்பவ தினம் ஆரிசின் வீட்டு காம்பவுண்ட்க்குள் புகுந்து அவரை கம்பியால் தாக்கி, வீட்டின் வெளியில் உள்ள சில பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளார். சேத மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் என தெரிகிறது. படுகாயமடைந்த ஆரிஸ் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.