கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் - டெல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதியா? - இரும்பு கம்பி மீது என்ஜின் மோதியதால் பரபரப்பு
- மது அருந்திய வாலிபர் அந்த பாறாங்கற்களை தண்டவாளத்தில் எடுத்து வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள்
- இரும்பு கம்பி மீது ரெயில் என்ஜின் மோதிய இடத்தில் கிடந்த கம்பியை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று மாலை பாறாங்கற்கள் இருந்தது. இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த பாறங்கற்களை அப்பு றப்படுத்தினார்கள்.
பின்னர் இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாறாங்கற்கள் வைக்கப் பட்டிருந்த பகுதியில் மது பாட்டில்களும் இருந்தது.
எனவே அந்த பகுதியில் இருந்து மது அருந்திய வாலிபர் அந்த பாறாங்கற்களை தண்டவாளத்தில் எடுத்து வைத்து சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை கன்னியாகுமரியில் இருந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வழியாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அகஸ்தீஸ்வரம் அருகே மாடுகட்டி விளை பகுதியில் ரெயில் வந்து கொண்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் இரும்புகம்பி ஒன்று சரிந்து கிடந்தது.இதில் ரெயிலின் இன்ஜின் பெட்டி மோதியது.
இரும்பு கம்பி மீது ரெயில் பெட்டி மோதியதில் என்ஜின் லேசான சேதம் ஏற்பட்டது. டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் இயக்கி சென்றார். இரும்பு கம்பி மீது ரெயில் பெட்டி மோதியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாகர் கோவில் ரெயில்வே போலீசாரும் ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். இன்று காலை யில் ரெயில்வே டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் சம்பவத்திற்கு சென்றனர்.
இரும்பு கம்பி மீது ரெயில் என்ஜின் மோதிய இடத்தில் கிடந்த கம்பியை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசார ணையில் பொது மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் இருக்கும் வகையில் இரும்பு கம்பிகள் நடப்பட்டு இருந்தது. நேற்று மாலை அந்த பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக அந்த பகுதியில் இருந்த இரும்பு கம்பிகள் மழையில் சரிந்து தண்டவாளத்தில் விழுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.