உள்ளூர் செய்திகள்

தனியார் கம்பெனியில் வெந்நீர் சிந்தியதால் ஊழியர் பலி

Published On 2022-08-08 13:42 IST   |   Update On 2022-08-08 13:42:00 IST
  • கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது விபத்து
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

ஜார்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் ரக்சி பகுதியை சேர்ந்தவர் ரபிக்முபின் (வயது 34). இவரது சகோதரர் மபிஜீதின் முமின் (31). இருவரும் குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

சம்பவத்தன்று ரபிக்முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக கொதிகலனில் இருந்த சூடான தண்ணீர் ரபிக்முபின் உடல் முழுவதும் பட்டு பலத்த காயமடைந்தார்.

பணியில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மபிஜீதின்முமின் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News