நாகர்கோவிலில் கல்லூரி மாணவன் உள்பட 4 பேர் சிக்கினர் - வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல்
- 2 வாரங்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
- சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறினார்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர்கள் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது ஒருவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் சென்னையில் படித்து வருவதாக தெரிவித்தார். சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.