குமரி மாவட்டத்தில் 10 டயர் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
- சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் மகிழ்ச்சி
- தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கனிம வளச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடி யாது. தரைமட்டத்தில் காணப்படும் பாறைகளில் மட்டுமே விதிகளின்படி கற்களை எடுக்கலாம். ஆனால் மாவட்டத்தில் முறைகேடாக எடுக்கப்படும் கல், ஜல்லி, பாறைப்பொ டிகள் கேரளாவுக்கு தொடர்ந்து கனரக லாரி களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக தினமும் 500-க்கும் மேற் பட்ட லாரிகளில் கல், ஜல்லி கொண்டு செல்லப்பட்டது. இதுதவிர காக்காவிளை, நெட்டா போன்ற அனைத்து வழிகளிலும் கல் பாரம் ஏற்றிய நூற்றுக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு சென்றன. லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டதால், தேசிய நெடுஞ்சாலை கள் உட்பட அனைத்து சாலைகளும் சேதமாகின. இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.
அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாக னங்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவிட்டார்.
விதிமுறையை மீறி கனிம வளங்கள் கொண்டு செல் லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.3 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் போக்கு வரத்து நெரிசல், விபத்துக் கள் அதிகரித்தலை தொடர்ந்து, 10 டயர் கொண்ட லாரிகளுக்கு மேல் உள்ள லாரிகள் கன்னியாகுமரி மாவட் டத்திற்குள் வர அரசு தடை விதித்தது. அரசின் இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்ததோடு, சாலை விபத்துக்களும் குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.