உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே காதலியை அரிவாளால் வெட்டி விட்டு வாலிபர் தற்கொலை செய்தது ஏன்?

Published On 2023-06-11 07:23 GMT   |   Update On 2023-06-11 07:23 GMT
  • மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார்
  • மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளார்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த டெனிஷா (வயது 22).

இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். அப்போது அங்கு படித்த மார்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக டெனிஷா, வெர்ஜின் ஜோஸ்வாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார். அவர் அங்கு வந்தததும் வெர்ஜின் ஜோஸ்வா மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளார்.

டெனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மார்த்தாண்டம் போலீசார், வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வந்த நிலையில், அவர் விரிகோடு பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தலை துண்டாகி தண்டவாளத்தில் கிடந்த வெர்ஜின் ஜோஸ்வாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. டெனிஷாவும், வெர்ஜின் ஜோஸ்வாவும் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3 ஆண்டுகள் சேர்ந்து படித்துள்ளனர். அப்போது இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அப்போதே பல இடங்களுக்கு சுற்றி திரிந்து இருவரும் பல்வேறு கோணங்களில் போட்டோக்களை எடுத்து வைத்துக்கொண்டனர். 3 ஆண்டுகள் படிப்பு முடிந்த பின்பு டெனிஷா பி.எட். படிக்க சென்றுள்ளார்.

வெர்ஜின் ஜோஸ்வா ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் டெனிஷா வுக்கும், வெர்ஜின் ஜோஸ்வா வுக்கும் இடையே காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வெர்ஜின் ஜோஸ்வாவின் நடவடிக்கை களில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

இதனால் அவருடன் பேசுவதை டெனிஷா தவிர்த்து வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த வெர்ஜின் ஜோஸ்வா, படிக்கும் காலங் களில் எடுத்த போட்டோக்கள் மற்றும் செல்பி எடுத்த போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அவரை தீவிரமாக காதலிப்பதாக ஓவியங்களை வரைந்து சமூக வலைதளங் களில் பரவ விட்டார். தனக்கு இறுதி ஊர்வலம் நடப்பதாக சவப்பெட்டிகளை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். தான் அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், காதலி தன்னை விட்டு வெகுதூரம் பிரிந்து செல்வதாகவும் அவரது பதிவேற்றங்கள் மற்றும் எழுத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை பார்த்த டெனிஷா அதிர்ச்சி அடைந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அவர், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை அழித்து விடும்படியும், மேலும் அவரிடம் இருந்த போட்டோக்களை திருப்பி தந்து விடும்படியும் கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு வெர்ஜின் ஜோஸ்வா உன்னுடைய முடிவு எனக்கு தெரிய வேண்டும், நீ என் வீட்டு அருகாமையில் வந்து போட்டோக்களை பெற்றுக்கொள் என கூறி அழைத்துள்ளார். வேறு வழி இன்றி டெனிஷா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வெர்ஜின் ஜோஸ்வாவை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது ஆள் ஆரவாரம் அற்ற பகுதிக்கு சென்ற டெனிஷா, ஏற்கனவே தீர்க்கமான முடிவில் இருந்த வெர்ஜின் ஜோஸ்வா வாகனத்தில் பெரிய வெட்டு கத்தியை மறைத்து வைத்து காத்திருந்தார். இருவரும் சிறிது நேரம் சிரித்து சிரித்து பேசியதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தி எடுத்து அவரை வெட்டி சாய்த்தார். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் நின்ற சிறுவன் கத்தி கூச்சலிட்டு உள்ளான்.

அப்போது மாணவி ஆரவாரம் இன்றி கிடப்பதை பார்த்ததும் வெர்ஜின் ஜோஸ்வா இறந்து விட்டார் என நினைத்து தான் கொண்டு வந்த வெட்டுக்கத்தி மற்றும் 2 மொபைல் போன்களையும் தூக்கி வீசி விட்டு தான் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அருகில் உள்ள முண்டவிளை ரெயில்வே கிராசின் அருகாமையில் எதிரே வந்த ெரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News