உள்ளூர் செய்திகள்

தம்மத்துகோணத்தில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தது ஏன்?

Published On 2022-09-18 13:15 IST   |   Update On 2022-09-18 13:15:00 IST
  • கணவன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட வேதனையால் விபரித முடிவு
  • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் ராஜா க்கமங்கலம் அருகே உள்ள தம்மத்துக் கோணம் சத்ரபதி சிவாஜி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 54). இவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (47).

இவர்களுக்கு அருள்ஜோதி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் மகன் அருள்ஜோதி மட்டும் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இர வில் உணவு அருந்தியதும் செல்வ குமார் மற்றும் புவனேசுவரி தங்கள் அறைக்கு தூங்கச் சென்று விட்டனர். நேற்று காலை அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வரவில்லை.

இதனால் பதட்டமடைந்த அருள்ஜோதி, அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பெற்றோர் பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வ குமார், புவனேசுவரி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில வருடங்க ளாக செல்வகுமார் நோயால் அவதிப்பட்டு வந்ததும் அதில் ஏற்பட்ட வேதனையில் தான் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News