உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
மார்த்தாண்டம் ேபாலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் காட்டாவிளையைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 39), தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.