உள்ளூர் செய்திகள்
விதி மீறும் மினி வேன்களால் அதிகரிக்கும் விபத்துகள்
- விதி மீறும் மினி வேன்களால் அதிகரிக்கும் விபத்துகள் ஏற்படுகிறது
- பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
கரூர்:
கரூர் நகரில் அதிகளவில், சரக்குகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஏற்றி செல்கின்றனர். வாகனத்துக்கு வெளியே பல அடி துாரத்துக்கு இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால், கரூரில் மினி வேன் ஓட்டுநர்கள், இதனை மீறுவதால், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இது குறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.