உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்துகுமார்(வயது 55) என்பவரை பிடித்து கைது செய்தனர்.
கரூர்
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமையிலான போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்துகுமார்(வயது 55) என்பவரை பிடித்து கைது செய்தனர்.
மற்றொருவர் ராஜா(40) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.