உள்ளூர் செய்திகள்
குளித்தலையில் நர்சிங் மாணவி மாயம்
- குளித்தலையில் நர்சிங் மாணவி மாயமானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., ஈச்சம்பட்டி காலனியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து பார்த்த போது மேனகாவை காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து காமாட்சி, தன் மகளை காணவில்லை என கொடுத்த புகார்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.