தென்காசியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த கேரள முதியவர் சாவு
- தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் தங்கி இருந்தனர்.
- இந்நிலையில் ஸ்ரீகுமார் (வயது 70) என்பவருக்கு அதிகாலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 3 வியாபாரிகள் தங்கி இருந்தனர். இந்நிலையில் அதில் ஒருவரான ஸ்ரீகுமார் (வயது 70) என்பவருக்கு அதிகாலையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவருடன் இருந்த வியாபாரிகள் அவரை மீட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்த னர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்காசி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். அதில் உயிரிழந்த ஸ்ரீகுமார் உள்பட 3 பேரும் சேர்ந்து பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பல்லாரி கொள்முதல் செய்வதற்காக வந்தவர்கள் என்றும், அப்போது திடீரென ஸ்ரீகுமாருக்கு மூச்சுசு திணறல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.