உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலை தட்டி கேட்ட மகனை கத்தியால் வெட்டிய தந்தை கைது

Published On 2023-11-17 12:41 IST   |   Update On 2023-11-17 12:41:00 IST
பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே கானாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது53) தொழிலாளி. இவரது மகன் வெங்கடகிருஷ்ணன் (24). கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடகிருஷ்ணன் தனது தந்தை ராமஜெயத்தை தட்டி கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் அங்கிருந்த கத்தியால் தனது மகன் வெங்கடகிருஷ்ணனை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News