உள்ளூர் செய்திகள்

கோட்டூர்புரத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2025-01-24 15:00 IST   |   Update On 2025-01-24 15:00:00 IST
  • வீட்டில் பணியாற்றி வரும் டிரைவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை:

சென்னை கோட்டூர்புரம் அம்பாள் தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகியுள்ளன.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபரின் வீட்டில் பணியாற்றி வரும் டிரைவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News