உள்ளூர் செய்திகள்
ருக்மணி சத்தியபாமா சமேதராக எழுந்தருளிய காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
காளிங்க நர்த்தன கிருஷ்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
- கலை துறையை சார்ந்தவர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணன்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான உறியடி நிகழ்வு, வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.
கலை துறையை சார்ந்தவர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்றது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.